செவ்வாய், ஏப்ரல் 24, 2012

.


ஏகஇறைவனின் திருப்பெயரால்....

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالأَنصَابُ وَالأَزْلاَمُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ {90}

நம்பிக்கை கொண்டோரே! மது116, சூதாட்டம்> பரிபீடங்கள்,135 (குறி கேட்பதற்கான) அம்புகள்136, ஆகியவை அருவருப்பானதும்> ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிரிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! திருக்குர்ஆன்: 5:90




கிரிக்கெட் துவக்க விழாவில் ஆபாச நடனம் !!

ஏப்ரல் 3 அன்று சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் துவக்க விழாவின் போது ஆபாச நடனமாடிய பாலிவுட் நடிக> நடிகையர் மீது ஒழுங்கு நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோயில் திருவிழாக்களில் ஆடும் நடனத்தை தடை செய்த போலீஸார்  இதை கண்டு கொள்ளாதது துரதிஸ்டம் என்றுக் கோரி மதுரை காந்தி நகரைச் சேர்ந்த வக்கீல் ஜெயக்குமார் என்பவர் மதுரை உயர் நீதி மன்றத்தில் அப்பொழுதே மனுத் தாக்கல் செய்திருந்தார் மனுவை வேண்டுமென்றே இழுத்தடித்த உயர்நீதிமன்ற நீதிபதி 20-4-2012 அன்று விசாரித்து மேல்படி மனுவை கூடுதல் டிஜிபி க்கு அனுப்பி நடிவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்துள்ளதாக அறிவித்தள்ளார். 

ஐ.பி.எல் கிரிக்கெட் துவக்க விழாவின் போது ஆபாச நடனமாடிய பாலிவுட் நடிக> நடிகையர் மீது ஒழுங்கு நடிவடிக்கை எடுக்கக் கோரி வக்கீல் ஜெயக்குமார் மனுத் தாக்கல் செய்வதற்கு முன்பே தமிழகத்தில் 10ம் வகுப்புக்கான பரீட்சை தொடங்க இருப்பதால் மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் 4ம் தேதி நடக்கவிருக்கின்ற ஐ.பி.எல். விளையாட்டின் தேதியை தள்ளி வைக்குமாறு பரிந்துரை செய்து மாநில முதல்வருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடிதம் எழுதியது. பார்க்க http://www.tntjsw.net/index.php  ஆனால் மாநில முதல்வர் அதன் தேதியைக் கூட தள்ளி வைக்க வில்லை, தள்ளி வைக்க முடிய வில்லை.

மாநில முதல்வரால் அதன் தேதியைக் கூட தள்ளி வைக்க முடியாத அளவுக்கு மத்திய அரசியல் வாதிகளின் தலையீடும்> கருப்புப் பண முதலைகளின் பக்க பலமும் பணம் கொழிக்கும் கிரிக்கெட்டுக்குள் புகுந்து விட்டது என்பதே முக்கியக் காரணம்.  

சினி ஃபீல்டைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் கிரிக்கெட் ஃபீல்டில் கோலோச்சுவதால் சினி ஃபீல்டும்> கிரிக்கெட் ஃபீல்டும் ஒன்றரக் கலந்து விட்டது அதனால் சினி ஃபீல்டை சேர்ந்தவர்களின் அட்டகாசத்தை ஒடுக்குவது என்பது இனி நடக்கக் கூடியக் காரியமில்லை. இனி வரக் கூடிய காலங்களில் கிரிக்கெட் ஃபீல்டிலிருந்து சினிமாக் காரர்களை துடைத்தெறிவது என்பதும் அறவே நடக்கக் கூடிய காரியமில்லை. 

இப்பொழுதும் விளையாட்டு இடைவெளிகளில் சினிமாக் காரர்களால் மோசமான பாலியல் நிகழ்வுகள் மறைமுகமாக நடக்கவேச் செய்கின்றன. இனிவரக் கூடிய காலங்களில் இவர்களால் இதை விட மோசமான ஆபாச நிகழ்வுகள் வெளிப்படையாகவே அரங்கேற்றப்படலாம்.

கோடிக் கணக்கில் பணம் புரளும் கிரிக்கெட் சூதாட்டத்தில் மோதிக் கொள்ளும் அணிகளை அதிகபட்சம் சினிமாக் காரர்களே ஏலம் எடுத்து வருவதை அறிந்து வருகிறோம். 

சினிமாவில் கூட உடல் உழைப்பு தேவைப்படும் இதில் பணத்தை விதைத்து விட்டு உட்கார்ந்த இடத்தில் கத்தை கத்தையாக அறுவடை செய்யலாம் என்று கடந்த வருடம் கொல்கத்தா அணியை ஏலம் எடுத்த ஷாருக்கான் இது ஒரு லாபம் தரும் வியாபரம் என்று வர்ணித்திருந்தது நினைவிருக்கலாம்.

இவர்களை விட இதில் ஆடும் ப்ளேயர்கள் விளையாடுவதற்காக சில கோடிக்கணக்கிலும்> விளம்பரத்திற்காக பல கோடிக்கணக்கிலும் பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர்.   

இதல்லாமல் கிரிக்கெட் அணிகளை ஏலம் விட்டதன் மூலமாக இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த ஆண்டு 7.000 கோடியை லாபமீட்டியதால் இந்த வருடம் அதைவிட பல மடங்கு லாபத்தை எதிர்பார்க்கலாம்.

அதனால் சினிமாக் காரர்கள் இதை விட மோசமான நடனம் ஆடினாலும்; ஐகோர்ட்டும் கண்டு கொள்ளாது> அரசும் கண்டு கொள்ளாது.

கோயில் திருவிழாக்களில் நடக்கும் ஆபாச நடனத்தை சாதாரண போலீஸ் தடுக்க முடியும்> கோடி கணக்கில் கருப்புப் பணம் புரளும் இந்த சூதாட்ட கிரிக்கெட்டில் நடைபெறும் ஆபாச நடனத்தை டி.ஜி.பி யாலும் தடுக்க முடியாது. காரணம் இந்திய சட்டம் அந்த லட்சனத்தில் தான் அமைந்துள்ளது.

சாதாரண லாட்ஜில் விபச்சாரம் நடந்தால் அது குற்றம்> அதே அடுக்கு மாடி ஹோட்டலில் நடந்தால் நட்சந்திர அந்தஸ்து என்ற நிலமை இருப்பதால் டி.ஜி.பி யால் இதை தடுக்க முடியாது வேடிக்கை தான் பார்க்க முடியும்.

மாநில முதல்வரால் கல்விக்காக அதன் தேதியைக் கூட மாற்றி அமைக்க முடியவில்லை என்றால் டி.ஜி.பி யால் என்ன செய்ய முடியும்.   

அதனால் சினிமாக் காரர்களுக்கு மிகவும் நெருக்கமாகி விட்ட கிரிக்கெட் துறையிலிருந்து அவர்களை முற்றாகத் துடைத்தெறியப்படாத வரை அதில் அவர்களால் நடத்தப்படும் ஆபாச நடனங்களை, இன்ன பிற அசிங்கங்களை தடுக்க முடியாது.

அதனால் இனி வரும் காலங்களில் அவர்களால் ஆக்ரமிக்கப்பட்ட இந்த சூதாட்ட கிரிக்கெட் துவக்க விழா மற்றும் இறுதி விழாவில் ஆபாச நடனமே நடைபெறும் தேசிய கீதம் நடைபெறாது என்பதை வக்கீல் ஜெயக்குமார் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

கோடிக் கணக்கில் ப்ளேயர்கள் ஏலம் எடுப்பது ஒரு புறமிருக்க அரங்கில் அமர்ந்து விளையாட்டை ரசிப்பதைப் போல் மோதிக்கொள்ளும் அணிகளின் மீது பலரும் சிறு தொகையிலிருந்து பெருந் தொகை வரை பந்தயம் கட்டுவதால் இது இரட்டை சூதாகிறது.   

நம்பிக்கை கொண்டோரே! மது116, சூதாட்டம்> பரிபீடங்கள்,135 (குறி கேட்பதற்கான) அம்புகள்136, ஆகியவை அருவருப்பானதும்> ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிரிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! திருக்குர்ஆன்: 5:90

கிரிக்கெட் விளையாட்டிற்கு அறவே சம்மந்தமில்லாத இது போன்ற அருவருக்கத்தக்க ஆபாச நடனங்களுடன் கோடிக்கணக்கில் பணத்தை இறைத்து சூதாட்டமாக மாற்றிய கிரிக்கெட்டிலிருந்து நல்லோர்> நடுநிலையானோர்> முஸ்லீம்கள் அனைவரும் முழுவதுமாக வெளியேறி விட வேண்டும் அறவே கலந்து கொள்ளக் கூடாது புறக்கனிக்க வேண்டும்.

இது போன்று சூதாட்டமாக மாறிய கிரிக்கெட்டை முஸ்லீம்களும் கண்டு களிப்பதற்காக அதிக விலை கொடுத்து டிக்கெட் எடுத்து முதல் வரிசையில் அமர்ந்து விசிலடித்து கை தட்டி ஆரவாரம் செய்து பார்ப்பதும்> இதற்கென நேரத்தை ஒதுக்கி அல்லது லீவு எழுதிக் கொடுத்து விட்டு டிவி க்கு முன்பாக அமர்ந்து பார்த்து ரசிப்பதும் அறவேக் கூடாது.

சூதாட்டமாக மாறிய கிரிக்கெட்டுக்காக கோடிக் கணக்கில் விலை போகும் கிரிக்கெட் ப்ளேயர்களுக்கு ரசிகர்களாகவும் மாறக் கூடாது.

மது>மாது>சூது மூன்றும் நிறைந்து விட்ட கிரிக்கெட்டுக்காக ஓடோடி நேரத்தை விணடித்துக் கொண்டிருக்காமல் ஒவ்வொரு நொடிப் பொழுதும் மரணத்தை எதிர் நோக்கி சென்று கொண்டிருக்கக் கூடிய நாம் நம்மைக் கடக்கும் பொண்ணான நேரத்தில் சிறிய நேரத்தை ஆரோக்கியத்திற்காகவும்> மறுமைப் பலனுக்காவும் செலவிட்டால் அது உலகிலும்> மறுமையிலும் பலன் தருவதாக அமையும் 

''நீ மாலை நேரத்தை அடைந்தால் காலை வேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு'' என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள். புகாரி 6416 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்


சனி, டிசம்பர் 10, 2011

.

ஏகஇறைவனின் திருப்பெயரால்...

வீர விளையாட்டைப் போலும், பொங்கல் தினத்தின் பொழுது போக்குப் போல் காட்டினாலும் ஜல்லிக்கட்டின் மறுப்பக்கம் வடிகட்டிய சூது.

இந்திய சுற்றுச்சூழல் வளங்கள் அமைச்சகத்தின் கீழ் ''இந்திய விலங்குகள் நலவாரியம்'' இயங்குகிறது. இந்த வாரியம் வனவிலங்குகள் பாதுகாக்கப்படுவதற்காக 1960ல் உருவாக்கப்பட்டது என்பதை அறிந்து வைத்திருக்கிறோம்.

தமிழர் திருநாள் என்றழைக்கப்படுகின்ற பொங்கல் பண்டிகையில் ஜல்லிக்கட்டு எனும் வீர விளையாட்டு பிரிக்க முடியாத அம்சமாக இருப்பதால் மாடுகளை துன்புறுத்தாமல் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்றும், அதைக் கண்காணிக்க ஒருக் குழுவை நியமித்து அந்தந்த மாவட்ட கலெக்டர் முன்னிலையில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவின் மீது ஆலோசனைக் கூறி (தீர்ப்பளிக்காமல்) அனுமதி வழங்கிய சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று இந்திய விலங்குகள் நலவாரியத் தலைவர் ஆர்.எம்.கார்ப் அவர்களும், துணைத்தலைவர் சின்னி கிருஷ்னாவும் பத்திரிகை நிருர்களை அழைத்து அறிவித்துள்ளனர்.

வருடந்தோறும் பொங்கள் திருநாளில் மாடுகளும், மனிதர்களும் குடல் பிதுங்கி சாவும் அலங்காநல்லூர், அவன்யாபுரம், பாலமேடு போன்றப் பகுதிகளுக்கு இந்தக் குழுவை அனுப்பி மாடுகளுக்கு சாராயம் கொடுக்கப்படுகிறதா ? கண்களில் மிளகாய் பொடி தூவப்படுகிறதா ? மாட்டின் வாலைப் பிடித்துக் கொண்டு ஓடுகின்றனரா ? என்பதை கண்காணிக்கப்பட இருப்பதாகவும் கூறி உள்ளனர்.

மாட்டை அடக்கும் மனிதர்கள் சாராயம் குடித்திருக்கின்றனரா ? என்று வாயை ஊத விட்டு இந்தக் குழு முகர்ந்துப் பார்க்காதாம் ! ஊக்க மாத்திரையை உட்கொண்டுள்ளனரா ? என்று மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பபடவும் மாட்டார்களாம் !  

என்னே விசித்திரமானத் தீர்ப்பு ?! மாட்டுக்கு ஊற்றப்படும் சாராயத்தை நிருத்தப் படுவதாலும், கண்களில் தூவப்படுகின்ற மிளகாய் பொடியை நிருத்தப்படுவதாலும் மட்டும் மாட்டுக்கு இழைக்கப்படும் சித்ரவதைகள் நிருத்தப்பட்டு விடுமா ? இது இன்னும் மாட்டுக்கு இழைக்கப்படும் சித்ரவதையை அதிகப்படுத்துவதாக அமையாதா

சாதாரணமாகவே சாராயம் குடித்தப்பின்னர் மனிதன் சுயகட்டுப்பாட்டை இழந்து விடுகிறான் என்பது எல்லோரும் அறிந்த விஷயம்.

மாட்டை அடக்குவதற்கு முன் கூடுதல் சாராயத்தைக் குடித்துவிட்டு சுயகட்டுப்பாட்டை இழந்து மாட்டின் மீது அத்து மீறுவதால் தான் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடுகளுக்கும் முரட்டுத்தனம் அதிகரிக்கட்டும் என்பதற்காக சாராயம் ஊற்றப்படுவதாகவும், கும்பலாக சேர்ந்து கொண்டு விரட்டும் சுயக்கட்டுப்பாட்டை இழந்தவர்களிடமிருந்து வெருண்டோடி தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் கண்களில் மிளகாய் பொடி தூவப்படுவதாகவும் ஜல்லிக்கட்டு ஏற்பாட்டுக் குழுவினர் காலம் காலமாகக் கூறி வருகின்றனர்.

சுயக்கட்டுப்பாட்டை இழந்தவர்களின் மரணப் பிடியிலிருந்து ஜல்லிக்கட்டு மாடுகளுக்கான பாதுகாப்பு நடிவடிக்கை அனைத்தையும் மேற்படி தீர்ப்பு தடுத்து விட்டதால் கடந்த வருடத்தை விட இந்த வருடம் ஜல்லிக்கட்டு மாடுகளின் சாவு எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என்பதை ஆர்.எம்.கார்ப் அவர்களும், துணைத் தலைவர் சின்னிகிருஷ்னாவும் பதிந்து கொள்ளட்டும்.

காரணம் காளையை அடக்கும் காளையர்கள் மூக்குப் பிடிக்க குடித்து விட்டு கொம்புக்கு பத்துப் பேர், திமிலுக்குப் பத்துப் பேர், வாலுக்கு பத்துப் பேர் என்று சூழ்ந்து கொண்டு வாயில்லா ஜீவனை சாய்த்து அதன் மேலே ஏறி மிதித்து படுகொலை செய்துவிட்டு காளையை அடக்கினேன் என்று மார் தட்டிக் கொள்வார்கள்.

இதை ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட மாடுகள் செத்தன என்று அடுத்த நாள்  பத்திரிகைகளில் சாதாரணமாக எழுதுவார்கள். இதே மாடுகளை ஹஜ்ஜூப் பெருநாளில் துன்புறுத்தாமல் அறுத்தால் ''கோமாதா கொலை'' என்றுக் கொட்டை எழுத்துகளில் எழுதுவார்கள்.  

அலங்காநல்லூரிலும், அவன்யா புரத்திலும் வருடந்தோறும் கூட்டம், கூட்டமாக மிதித்து குடல் பிதுங்க கொலை செய்யப்படும் மாடுகளுக்குப் பெயர் ''வெறும் மாடுகள்'' தான் ?

இன்னும் இதை கலெக்டர் முன்னிலையில் நடத்தப்படுவதால் மட்டும் படுகாயங்களிலிருந்தும், படுகொலையிலிருந்தும் மனிதர்களும், மாடுகளும் பாதுகாக்கப்பட்டு விடுவார்களா

கடந்த 2009ல் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலின் பங்குனித் திருவிழாவின் போது நடந்த பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்ட டிஜிபி தலைமையில் தான் நடந்தது. அடுத்த நாள் செய்தியில் அந்த டிஜிபி உட்பட 240 பேர் மாடு முட்டி படுகாயமடைந்ததாக பத்திரிகைகளில் செய்தியாக வந்தது. இனிவரும் காலங்களில் எந்த மாவட்ட கலெக்டருடன் எத்தனைப் பேர் படுகாயம், எத்தனைப் பேர் குடல்கள் பிதுங்க மாண்டனர் என்ற செய்தியும் வரும். 

ஜல்லிக்கட்டுத் தீமைகள் இத்துடன் முடிந்து விடவில்லை இன்னும் உயிரைப் பணயம் வைத்து நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டில் களமிறக்கி விடப்படுபவர்கள் விஐபி வீட்டுப் பிள்ளைகளோ, ஜமீன்தார் வீட்டுப் பிள்ளைகளோக் கிடையாது. மாறாக ஏழை குடும்பத்தைச் சேர்ந்த கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட இஞைர்கள் தேடி கண்டுப்பிடித்து இதற்காக கொம்பு சீவப்பட்டு கூலிக்கு களமிறக்கி விடப்படுகின்றனர். 

இன்னும் இது வீர விளையாட்டைப் போலும், பொங்கல் பண்டிகை தினத்தின் பொழுது போக்குப் போல் காட்டினாலும் இதன் மறுப்பக்கம் வடிகட்டிய சூது என்பதை உலகத் தமிழர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். இதை நன்றாக அறிந்து கொண்டே இது வர்த்தக ரீதியாக நடத்தப்படுகிறது என்றும், இதைப் பரிசு என்றும் ஒரு பார்ப்பனப் பத்திரிகை வெட்கமில்லாமல் எழுதி இருக்கிறது. 

ஒன்று ஜல்லிக்கட்டு என்றப் பெயரில் நடைபெறும் இந்த மிருகவதையை முழுமையாக தடை செய்து தீர்ப்பளிக்க வேண்டும், அல்லது ஒரு மாட்டுக்கு ஒரே வீரன் என்ற சட்டமியற்றி தீர்ப்பளித்து அதைக் கண்காணிக்க ஒருக் குழுவை நியமிக்க வேண்டும்.

அவ்வாறு செய்தால் அடுத்த வருடமெல்லாம் ஜல்லிக்கட்டு நடந்த சுவடேத் தெரியாமல் அழிந்துப்போய் விடும். அழிந்து போய்விடக் கூடாது என்பதற்காகத் தான் ஆறுதல் தீர்ப்பளித்துள்ளனர்.

ஆரியர்களின் அறிவுக்கு ஒவ்வாத அஞ்ஞான சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு முன் நின்று தாக்குப் பிடிக்க முடியாமல் தள்ளாடுவதை அறிந்த ஆரியர்கள் அதைத் தாங்கிப் பிடிப்பதற்காக படும் அவஸ்தையைப் பார்ப்பவர்கள் ஐயோப் பாவம் ! என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.

தொண்று தொட்டு காலமாக பின்பற்றி வரும் ஆரிய சடங்கு சம்பிரதாயங்களை நிருத்தி விட்டால் ஹிந்து மதமே அழிந்துவிடும் என்று அவர்கள் அஞ்சுவதால் ஜல்லிக்கட்டை நிருத்தக்கோரி வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மாட்டுக்கு மிளகாய் பொடி தூவக் கூடாது ? மூக்குப்பொடி தூவக் கூடாது என்று ஆறுதல் தீர்ப்பை எழுதி வாசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்.

பல நூறு ஆண்டுகளாக பல்லாயிரக் கணக்கான வழக்குகள் பதிந்தப் பின்னரே ஆரிய மனு தர்மத்தின் ''சதி '' எனும்  உயிருடன் எரிக்கப்படும் உடன் கட்டை படுகொலையை நிருத்தக் கோரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதனால் ஜல்லிக்கட்டு என்றப் பெயரில் நடைபெறும் மிருகவதையும், பகிரங்க சூதாட்டமும் நிருத்தப்பட வேண்டுமெனில் நல்லோர்கள், நடுநிலையாளர்கள் சடைவடையாமல் தொடர்ந்து நீதிமன்றத்தை நோக்கி நடையாய் நடந்தால் இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகாவது ''உடன் கட்டை'' தடை செய்யப்ட்டதைப் போல் ஜல்லிக்கட்டும் தடை செய்யப்படலாம்.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

சனி, டிசம்பர் 03, 2011

.


ஏகஇறைவனின் திருப்பெயரால்...

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالأَنصَابُ وَالأَزْلاَمُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

நம்பிக்கை கொண்டோரே! மது116, சூதாட்டம், பலிபீடங்கள்,135 (குறி கேட்பதற்கான) அம்புகள்136, ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! திருக்குர்ஆன்: 5:90



 
பணம் வைத்து ரம்மி விளையாடலாம்! மங்காத்தா விளையாடக் கூடாது! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு (?)

மஹாலட்சுமி கல்சுரல் அசோசியேஷன் என்ற அமைப்பு சென்னை தி.நகரில் உள்ளது இதில் அதன் உறுப்பினர்கள் கூடி சூது விளையாடுவது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. 

இதை அறிந்த பொதுமக்களில் சிலர் மேல்படி அமைப்பிற்குள் சூதாட்டம் கலை கட்டுவதாக தி.நகர் போலீசுக்கு தகவல் கொடுக்க போலீஸார் விரைந்து சென்று சோதனையிட்டதில் 56 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது கையும் களவுமாகப் படிபட்டுள்ளனர் அத்துடன் சூது விளையாடிய இடத்தில் 178 டோக்கன்களும் 6.75 லட்சம் ரூபாய்களும் கைப்பற்றபட்டு இது மேல்படி அமைப்பின் நிர்வாகிகளின் ஒப்புதலுடன் நடத்தப்படுகிறது என்று நீதிமன்றத்தில் போலீஸ் மனு தாக்கல் செய்தது.

மஹாலட்சுமி கல்;சுரல் அசோசியேஷன் அமைப்பினர் எதிர் மனு தாக்கல் செய்ததில் எங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் பணம் வைத்து விளையாடியது 13 சீட்டுகளைக் கொண்ட ரம்மி விளையாட்டுத்தான் இது அறிவுத்திறனை வளர்க்கக் கூடியது சூதாட்டமல்ல என்று தாக்கல் செய்திருந்தனர். நாங்கள் கையும் களவுமாக பிடித்த பொழுது அவர்கள் விளையாடியது ரம்மி அல்ல மங்காத்தா தான் என்று போலீஸ் தரப்பில் அடித்துக் கூறி இருந்தனர். 

இரு தரப்பு மனுவையும் பார்வையிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன் அவர்கள் 13 சீட்டுகளை வைத்து ரம்மி விளையாடுவது என்பது 3 சீட்டுகளை கொண்டு விளையாடுவது போல் உள்ளதல்ல இது ஒரு அறிவு சார்ந்த விளையாட்டு என்பதால் இதில் பணம் கட்டியும் விளையாடலாம் அதை சூதாட்டம் என்று சொல்லக் கூடாது என்ற திர்ப்பைக் கூறி உள்ளார். அத்துடன் அது ஒரு அஷோசியேஷன் என்பதால் அதற்குள் அடிக்கடி நுழைந்து போலீஸார் சோதனை என்றப் பெயரில் இடையூறு செய்வது நல்லதல்ல என்ற அறிவுரையையும் சேர்த்தே போலீசாருக்கு வழங்கி உள்ளார். 

இன்னும் சிறிது காலங்களில் பணம் வைத்து விளையாடும் மங்காத்தா விளையாட்டில் வெற்றிப் பெறுபவர்கள் இரவு பகலாக உட்கார்ந்து கண் விழித்து மூளையை செலவழிப்பதால் மூளை அசுர வளர்ச்சி அடைகிறது என்பதால் அதை சூது விளையாட்டு என்று சொல்லக் கூடாது மங்காத்தா விளையாடுபவர்களை போலீஸ் தொந்தரவு செய்யக்கூடாது என்று வேறொரு நீதிபதி தீர்ப்பு வழங்கலாம்.

அனைத்து விளையாட்டுக்களுமே அறிவு சார்ந்தது தான் என்பதில் யாருக்கும் மாற்று அபிப்பிராயம் இருக்கவே முடியாது. ஆனால் அந்த விளையாட்டுகளில் பணமோ இன்னப் பிறப் பொருட்களோ பணயமாக்கப்பட்டால் தான் அது சூதாக மாறுகிறது என்பது பாலர் பள்ளியில் பயிலக்கூடிய பாலகர்களும் அறிந்த விஷயம். 

சூது விளையாட்டு கிரிமினல் சிந்தனையை வளர்க்கவே உதவும் கிரிமினல் சிந்தனை வீட்டையும் நாட்டையும் அழிக்கும் தீய சக்தி என்பதை மஹாலட்சுமி கல்;சுரல் அசோசியேஷன் அமைப்பினர் அறிந்திருக்க வில்லை என்பதில் நமக்கு வருத்தமில்லை ஆனால் நாட்டை காக்கும் அரணாகத் திகழக் கூடிய நீதிபதி விளங்கி வைத்திருக்க வில்லையே என்பது தான் நமக்கு வருத்தமளிக்கிறது.  

13ம் நூற்றாண்டில் சீனாவின் பீஜிங் என்றப் பிரதேசத்தை வெற்றிக் கொண்ட குபுலாங் கால் என்ற வீரன் மக்களை நோக்கி நான் இந்த தேசத்தை கடும் முயற்சியால் வெற்றி கொண்டுள்ளேன் இந்த தேசத்து மண் முதல் அனைத்தும் எனக்கு சொந்தமானதே! இதிலிருந்து எதையும் நீங்கள் முறையான வழியில் அடைந்து கொள்ளலாம் மாறாக எவரும் எந்தப் பொருளையும் உங்களுடைய உடமை என்றெண்ணி சூது விளையாட்டில் தோற்று விட முடியாது அவ்வாறு எவராவது எங்காவது சூது விளையாடினால் அவர்களை எனது வால் சந்திக்கும் என்று பிரகடனம் செய்தான். இது நாட்டின் மீதுள்ள அவனுடைய பக்தியை பறைசாற்றியது.  

குபுலாங் காலுடைய பிரகடனத்திற்கு முன்னரே சூதை ஒழித்தால் அல்லது அதிலிருந்து விலகினால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிப்பெற முடியும் என்று (1400 வருடங்களுக்கு முன்) மனிதகுலத்தை நோக்கி திருமறைக் குர்ஆன் எச்சரிக்கை செய்து விட்டது. 

நம்பிக்கை கொண்டோரே! மது116, சூதாட்டம், பலிபீடங்கள்,135 (குறி கேட்பதற்கான) அம்புகள்136, ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! திருக்குர்ஆன்: 5:90

இன்று தேசபக்தியாளர்கள் என்பவர்களை இந்தியாவில் சல்லடை இட்டுத் தேடினாலும் அரசப் பதவியில் இருப்பவர்கள் முதல் அரசப் பதவியில் அமரத் துடிக்கும் அண்ணா ஹாசாரே வரை எவரிடமும் காண முடியாது என்பதால் சூது நாட்டை அழிக்கும் தீய சக்தி என்பதைப் பற்றி அறவே கவலைப் படாமல் தேச நலலை கருத்தில் கொள்ளாமல் தீர்ப்பை வழங்கி உள்ளார் நீதிபதி ராஜேந்திரன் அவர்கள்.  



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்