ஏகஇறைவனின் திருப்பெயரால்....
يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالأَنصَابُ
وَالأَزْلاَمُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ
فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ {90}
நம்பிக்கை கொண்டோரே! மது116, சூதாட்டம்> பரிபீடங்கள்,135 (குறி கேட்பதற்கான) அம்புகள்136, ஆகியவை அருவருப்பானதும்> ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிரிருந்து
விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! திருக்குர்ஆன்: 5:90
கிரிக்கெட் துவக்க விழாவில் ஆபாச நடனம் !!
ஏப்ரல் 3 அன்று சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட்
துவக்க விழாவின் போது ஆபாச நடனமாடிய பாலிவுட் நடிக> நடிகையர் மீது ஒழுங்கு நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோயில் திருவிழாக்களில்
ஆடும் நடனத்தை தடை செய்த போலீஸார் இதை கண்டு
கொள்ளாதது துரதிஸ்டம் என்றுக் கோரி மதுரை காந்தி நகரைச் சேர்ந்த வக்கீல் ஜெயக்குமார்
என்பவர் மதுரை உயர் நீதி மன்றத்தில் அப்பொழுதே மனுத் தாக்கல் செய்திருந்தார் மனுவை
வேண்டுமென்றே இழுத்தடித்த உயர்நீதிமன்ற நீதிபதி 20-4-2012 அன்று விசாரித்து மேல்படி மனுவை கூடுதல் டிஜிபி
க்கு அனுப்பி நடிவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்துள்ளதாக அறிவித்தள்ளார்.
ஐ.பி.எல் கிரிக்கெட் துவக்க விழாவின் போது ஆபாச
நடனமாடிய பாலிவுட் நடிக> நடிகையர் மீது ஒழுங்கு நடிவடிக்கை எடுக்கக் கோரி
வக்கீல் ஜெயக்குமார் மனுத் தாக்கல் செய்வதற்கு முன்பே தமிழகத்தில் 10ம் வகுப்புக்கான பரீட்சை தொடங்க இருப்பதால் மாணவர்களின்
எதிர் காலத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் 4ம் தேதி நடக்கவிருக்கின்ற ஐ.பி.எல். விளையாட்டின்
தேதியை தள்ளி வைக்குமாறு பரிந்துரை செய்து மாநில முதல்வருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
கடிதம் எழுதியது. பார்க்க http://www.tntjsw.net/index.php ஆனால் மாநில முதல்வர் அதன் தேதியைக் கூட தள்ளி வைக்க வில்லை,
தள்ளி வைக்க முடிய வில்லை.
மாநில முதல்வரால் அதன் தேதியைக் கூட தள்ளி வைக்க
முடியாத அளவுக்கு மத்திய அரசியல் வாதிகளின் தலையீடும்> கருப்புப் பண
முதலைகளின் பக்க பலமும் பணம் கொழிக்கும் கிரிக்கெட்டுக்குள் புகுந்து விட்டது என்பதே
முக்கியக் காரணம்.
சினி ஃபீல்டைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் கிரிக்கெட்
ஃபீல்டில் கோலோச்சுவதால் சினி ஃபீல்டும்>
கிரிக்கெட் ஃபீல்டும் ஒன்றரக் கலந்து விட்டது
அதனால் சினி ஃபீல்டை சேர்ந்தவர்களின் அட்டகாசத்தை ஒடுக்குவது என்பது இனி நடக்கக் கூடியக்
காரியமில்லை. இனி வரக் கூடிய காலங்களில் கிரிக்கெட் ஃபீல்டிலிருந்து சினிமாக் காரர்களை
துடைத்தெறிவது என்பதும் அறவே நடக்கக் கூடிய காரியமில்லை.
இப்பொழுதும் விளையாட்டு இடைவெளிகளில் சினிமாக்
காரர்களால் மோசமான பாலியல் நிகழ்வுகள் மறைமுகமாக நடக்கவேச் செய்கின்றன. இனிவரக் கூடிய
காலங்களில் இவர்களால் இதை விட மோசமான ஆபாச நிகழ்வுகள் வெளிப்படையாகவே அரங்கேற்றப்படலாம்.
கோடிக் கணக்கில்
பணம் புரளும் கிரிக்கெட் சூதாட்டத்தில் மோதிக் கொள்ளும் அணிகளை அதிகபட்சம் சினிமாக்
காரர்களே ஏலம் எடுத்து வருவதை அறிந்து வருகிறோம்.
சினிமாவில் கூட உடல் உழைப்பு தேவைப்படும் இதில்
பணத்தை விதைத்து விட்டு உட்கார்ந்த இடத்தில் கத்தை கத்தையாக அறுவடை செய்யலாம் என்று
கடந்த வருடம் கொல்கத்தா அணியை ஏலம் எடுத்த ஷாருக்கான் இது ஒரு லாபம் தரும் வியாபரம்
என்று வர்ணித்திருந்தது நினைவிருக்கலாம்.
இவர்களை விட இதில் ஆடும் ப்ளேயர்கள் விளையாடுவதற்காக
சில கோடிக்கணக்கிலும்> விளம்பரத்திற்காக பல கோடிக்கணக்கிலும் பெற்று
சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர்.
இதல்லாமல் கிரிக்கெட் அணிகளை ஏலம் விட்டதன் மூலமாக
இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த ஆண்டு 7.000 கோடியை லாபமீட்டியதால் இந்த வருடம் அதைவிட பல
மடங்கு லாபத்தை எதிர்பார்க்கலாம்.
அதனால் சினிமாக் காரர்கள் இதை விட மோசமான நடனம் ஆடினாலும்; ஐகோர்ட்டும் கண்டு கொள்ளாது> அரசும் கண்டு கொள்ளாது.
அதனால் சினிமாக் காரர்கள் இதை விட மோசமான நடனம் ஆடினாலும்; ஐகோர்ட்டும் கண்டு கொள்ளாது> அரசும் கண்டு கொள்ளாது.
கோயில் திருவிழாக்களில் நடக்கும் ஆபாச நடனத்தை
சாதாரண போலீஸ் தடுக்க முடியும்> கோடி கணக்கில் கருப்புப் பணம் புரளும் இந்த சூதாட்ட
கிரிக்கெட்டில் நடைபெறும் ஆபாச நடனத்தை டி.ஜி.பி யாலும் தடுக்க முடியாது. காரணம் இந்திய
சட்டம் அந்த லட்சனத்தில் தான் அமைந்துள்ளது.
சாதாரண லாட்ஜில் விபச்சாரம் நடந்தால் அது குற்றம்> அதே அடுக்கு மாடி
ஹோட்டலில் நடந்தால் நட்சந்திர அந்தஸ்து என்ற நிலமை இருப்பதால் டி.ஜி.பி யால் இதை தடுக்க
முடியாது வேடிக்கை தான் பார்க்க முடியும்.
மாநில முதல்வரால்
கல்விக்காக அதன் தேதியைக் கூட மாற்றி அமைக்க முடியவில்லை என்றால் டி.ஜி.பி யால் என்ன
செய்ய முடியும்.
அதனால் சினிமாக் காரர்களுக்கு மிகவும் நெருக்கமாகி
விட்ட கிரிக்கெட் துறையிலிருந்து அவர்களை முற்றாகத் துடைத்தெறியப்படாத வரை அதில் அவர்களால்
நடத்தப்படும் ஆபாச நடனங்களை, இன்ன பிற அசிங்கங்களை
தடுக்க முடியாது.
அதனால் இனி வரும் காலங்களில் அவர்களால் ஆக்ரமிக்கப்பட்ட
இந்த சூதாட்ட கிரிக்கெட் துவக்க விழா மற்றும் இறுதி விழாவில் ஆபாச நடனமே நடைபெறும்
தேசிய கீதம் நடைபெறாது என்பதை வக்கீல் ஜெயக்குமார் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
கோடிக் கணக்கில் ப்ளேயர்கள் ஏலம் எடுப்பது ஒரு
புறமிருக்க அரங்கில் அமர்ந்து விளையாட்டை ரசிப்பதைப் போல் மோதிக்கொள்ளும் அணிகளின்
மீது பலரும் சிறு தொகையிலிருந்து பெருந் தொகை வரை பந்தயம் கட்டுவதால் இது இரட்டை சூதாகிறது.
நம்பிக்கை கொண்டோரே! மது116, சூதாட்டம்> பரிபீடங்கள்,135 (குறி கேட்பதற்கான) அம்புகள்136, ஆகியவை அருவருப்பானதும்> ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிரிருந்து
விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! திருக்குர்ஆன்: 5:90
கிரிக்கெட் விளையாட்டிற்கு அறவே சம்மந்தமில்லாத
இது போன்ற அருவருக்கத்தக்க ஆபாச நடனங்களுடன் கோடிக்கணக்கில் பணத்தை இறைத்து சூதாட்டமாக
மாற்றிய கிரிக்கெட்டிலிருந்து நல்லோர்>
நடுநிலையானோர்> முஸ்லீம்கள் அனைவரும்
முழுவதுமாக வெளியேறி விட வேண்டும் அறவே கலந்து கொள்ளக் கூடாது புறக்கனிக்க வேண்டும்.
இது போன்று சூதாட்டமாக மாறிய கிரிக்கெட்டை முஸ்லீம்களும்
கண்டு களிப்பதற்காக அதிக விலை கொடுத்து டிக்கெட் எடுத்து முதல் வரிசையில் அமர்ந்து
விசிலடித்து கை தட்டி ஆரவாரம் செய்து பார்ப்பதும்> இதற்கென நேரத்தை
ஒதுக்கி அல்லது லீவு எழுதிக் கொடுத்து விட்டு டிவி க்கு முன்பாக அமர்ந்து பார்த்து
ரசிப்பதும் அறவேக் கூடாது.
சூதாட்டமாக மாறிய கிரிக்கெட்டுக்காக கோடிக் கணக்கில்
விலை போகும் கிரிக்கெட் ப்ளேயர்களுக்கு ரசிகர்களாகவும் மாறக் கூடாது.
மது>மாது>சூது மூன்றும் நிறைந்து விட்ட கிரிக்கெட்டுக்காக
ஓடோடி நேரத்தை விணடித்துக் கொண்டிருக்காமல் ஒவ்வொரு நொடிப் பொழுதும் மரணத்தை எதிர் நோக்கி சென்று கொண்டிருக்கக் கூடிய நாம் நம்மைக்
கடக்கும் பொண்ணான நேரத்தில் சிறிய நேரத்தை ஆரோக்கியத்திற்காகவும்> மறுமைப் பலனுக்காவும் செலவிட்டால் அது உலகிலும்> மறுமையிலும் பலன்
தருவதாக அமையும்
''நீ மாலை நேரத்தை
அடைந்தால் காலை வேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே!
நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு.
உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச்
செலவிடு'' என்று இப்னு உமர்(ரலி)
அவர்கள் கூறுவார்கள். புகாரி 6416 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ
وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ
الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத்
தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி
பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்