ஏகஇறைவனின் திருப்பெயரால்...
வீர விளையாட்டைப் போலும், பொங்கல் தினத்தின் பொழுது போக்குப் போல் காட்டினாலும் ஜல்லிக்கட்டின் மறுப்பக்கம் வடிகட்டிய சூது.
இந்திய சுற்றுச்சூழல் வளங்கள் அமைச்சகத்தின் கீழ் ''இந்திய விலங்குகள் நலவாரியம்'' இயங்குகிறது. இந்த வாரியம் வனவிலங்குகள் பாதுகாக்கப்படுவதற்காக 1960ல் உருவாக்கப்பட்டது என்பதை அறிந்து வைத்திருக்கிறோம்.
தமிழர் திருநாள் என்றழைக்கப்படுகின்ற பொங்கல் பண்டிகையில் ஜல்லிக்கட்டு எனும் வீர விளையாட்டு பிரிக்க முடியாத அம்சமாக இருப்பதால் மாடுகளை துன்புறுத்தாமல் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்றும், அதைக் கண்காணிக்க ஒருக் குழுவை நியமித்து அந்தந்த மாவட்ட கலெக்டர் முன்னிலையில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவின் மீது ஆலோசனைக் கூறி (தீர்ப்பளிக்காமல்) அனுமதி வழங்கிய சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று இந்திய விலங்குகள் நலவாரியத் தலைவர் ஆர்.எம்.கார்ப் அவர்களும், துணைத்தலைவர் சின்னி கிருஷ்னாவும் பத்திரிகை நிருர்களை அழைத்து அறிவித்துள்ளனர்.
வருடந்தோறும் பொங்கள் திருநாளில் மாடுகளும், மனிதர்களும் குடல் பிதுங்கி சாவும் அலங்காநல்லூர், அவன்யாபுரம், பாலமேடு போன்றப் பகுதிகளுக்கு இந்தக் குழுவை அனுப்பி மாடுகளுக்கு சாராயம் கொடுக்கப்படுகிறதா ? கண்களில் மிளகாய் பொடி தூவப்படுகிறதா ? மாட்டின் வாலைப் பிடித்துக் கொண்டு ஓடுகின்றனரா ? என்பதை கண்காணிக்கப்பட இருப்பதாகவும் கூறி உள்ளனர்.
மாட்டை அடக்கும் மனிதர்கள் சாராயம் குடித்திருக்கின்றனரா ? என்று வாயை ஊத விட்டு இந்தக் குழு முகர்ந்துப் பார்க்காதாம் ! ஊக்க மாத்திரையை உட்கொண்டுள்ளனரா ? என்று மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பபடவும் மாட்டார்களாம் !
என்னே விசித்திரமானத் தீர்ப்பு ?! மாட்டுக்கு ஊற்றப்படும் சாராயத்தை நிருத்தப் படுவதாலும், கண்களில் தூவப்படுகின்ற மிளகாய் பொடியை நிருத்தப்படுவதாலும் மட்டும் மாட்டுக்கு இழைக்கப்படும் சித்ரவதைகள் நிருத்தப்பட்டு விடுமா ? இது இன்னும் மாட்டுக்கு இழைக்கப்படும் சித்ரவதையை அதிகப்படுத்துவதாக அமையாதா ?
சாதாரணமாகவே சாராயம் குடித்தப்பின்னர் மனிதன் சுயகட்டுப்பாட்டை இழந்து விடுகிறான் என்பது எல்லோரும் அறிந்த விஷயம்.
மாட்டை அடக்குவதற்கு முன் கூடுதல் சாராயத்தைக் குடித்துவிட்டு சுயகட்டுப்பாட்டை இழந்து மாட்டின் மீது அத்து மீறுவதால் தான் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடுகளுக்கும் முரட்டுத்தனம் அதிகரிக்கட்டும் என்பதற்காக சாராயம் ஊற்றப்படுவதாகவும், கும்பலாக சேர்ந்து கொண்டு விரட்டும் சுயக்கட்டுப்பாட்டை இழந்தவர்களிடமிருந்து வெருண்டோடி தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் கண்களில் மிளகாய் பொடி தூவப்படுவதாகவும் ஜல்லிக்கட்டு ஏற்பாட்டுக் குழுவினர் காலம் காலமாகக் கூறி வருகின்றனர்.
சுயக்கட்டுப்பாட்டை இழந்தவர்களின் மரணப் பிடியிலிருந்து ஜல்லிக்கட்டு மாடுகளுக்கான பாதுகாப்பு நடிவடிக்கை அனைத்தையும் மேற்படி தீர்ப்பு தடுத்து விட்டதால் கடந்த வருடத்தை விட இந்த வருடம் ஜல்லிக்கட்டு மாடுகளின் சாவு எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என்பதை ஆர்.எம்.கார்ப் அவர்களும், துணைத் தலைவர் சின்னிகிருஷ்னாவும் பதிந்து கொள்ளட்டும்.
காரணம் காளையை அடக்கும் காளையர்கள் மூக்குப் பிடிக்க குடித்து விட்டு கொம்புக்கு பத்துப் பேர், திமிலுக்குப் பத்துப் பேர், வாலுக்கு பத்துப் பேர் என்று சூழ்ந்து கொண்டு வாயில்லா ஜீவனை சாய்த்து அதன் மேலே ஏறி மிதித்து படுகொலை செய்துவிட்டு காளையை அடக்கினேன் என்று மார் தட்டிக் கொள்வார்கள்.
இதை ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட மாடுகள் செத்தன என்று அடுத்த நாள் பத்திரிகைகளில் சாதாரணமாக எழுதுவார்கள். இதே மாடுகளை ஹஜ்ஜூப் பெருநாளில் துன்புறுத்தாமல் அறுத்தால் ''கோமாதா கொலை'' என்றுக் கொட்டை எழுத்துகளில் எழுதுவார்கள்.
அலங்காநல்லூரிலும், அவன்யா புரத்திலும் வருடந்தோறும் கூட்டம், கூட்டமாக மிதித்து குடல் பிதுங்க கொலை செய்யப்படும் மாடுகளுக்குப் பெயர் ''வெறும் மாடுகள்'' தான் ?
இன்னும் இதை கலெக்டர் முன்னிலையில் நடத்தப்படுவதால் மட்டும் படுகாயங்களிலிருந்தும், படுகொலையிலிருந்தும் மனிதர்களும், மாடுகளும் பாதுகாக்கப்பட்டு விடுவார்களா ?
கடந்த 2009ல் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலின் பங்குனித் திருவிழாவின் போது நடந்த பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்ட டிஜிபி தலைமையில் தான் நடந்தது. அடுத்த நாள் செய்தியில் அந்த டிஜிபி உட்பட 240 பேர் மாடு முட்டி படுகாயமடைந்ததாக பத்திரிகைகளில் செய்தியாக வந்தது. இனிவரும் காலங்களில் எந்த மாவட்ட கலெக்டருடன் எத்தனைப் பேர் படுகாயம், எத்தனைப் பேர் குடல்கள் பிதுங்க மாண்டனர் என்ற செய்தியும் வரும்.
ஜல்லிக்கட்டுத் தீமைகள் இத்துடன் முடிந்து விடவில்லை இன்னும் உயிரைப் பணயம் வைத்து நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டில் களமிறக்கி விடப்படுபவர்கள் விஐபி வீட்டுப் பிள்ளைகளோ, ஜமீன்தார் வீட்டுப் பிள்ளைகளோக் கிடையாது. மாறாக ஏழை குடும்பத்தைச் சேர்ந்த கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட இஞைர்கள் தேடி கண்டுப்பிடித்து இதற்காக கொம்பு சீவப்பட்டு கூலிக்கு களமிறக்கி விடப்படுகின்றனர்.
இன்னும் இது வீர விளையாட்டைப் போலும், பொங்கல் பண்டிகை தினத்தின் பொழுது போக்குப் போல் காட்டினாலும் இதன் மறுப்பக்கம் வடிகட்டிய சூது என்பதை உலகத் தமிழர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். இதை நன்றாக அறிந்து கொண்டே இது வர்த்தக ரீதியாக நடத்தப்படுகிறது என்றும், இதைப் பரிசு என்றும் ஒரு பார்ப்பனப் பத்திரிகை வெட்கமில்லாமல் எழுதி இருக்கிறது.
ஒன்று ஜல்லிக்கட்டு என்றப் பெயரில் நடைபெறும் இந்த மிருகவதையை முழுமையாக தடை செய்து தீர்ப்பளிக்க வேண்டும், அல்லது ஒரு மாட்டுக்கு ஒரே வீரன் என்ற சட்டமியற்றி தீர்ப்பளித்து அதைக் கண்காணிக்க ஒருக் குழுவை நியமிக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் அடுத்த வருடமெல்லாம் ஜல்லிக்கட்டு நடந்த சுவடேத் தெரியாமல் அழிந்துப்போய் விடும். அழிந்து போய்விடக் கூடாது என்பதற்காகத் தான் ஆறுதல் தீர்ப்பளித்துள்ளனர்.
ஆரியர்களின் அறிவுக்கு ஒவ்வாத அஞ்ஞான சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு முன் நின்று தாக்குப் பிடிக்க முடியாமல் தள்ளாடுவதை அறிந்த ஆரியர்கள் அதைத் தாங்கிப் பிடிப்பதற்காக படும் அவஸ்தையைப் பார்ப்பவர்கள் ஐயோப் பாவம் ! என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.
தொண்று தொட்டு காலமாக பின்பற்றி வரும் ஆரிய சடங்கு சம்பிரதாயங்களை நிருத்தி விட்டால் ஹிந்து மதமே அழிந்துவிடும் என்று அவர்கள் அஞ்சுவதால் ஜல்லிக்கட்டை நிருத்தக்கோரி வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மாட்டுக்கு மிளகாய் பொடி தூவக் கூடாது ? மூக்குப்பொடி தூவக் கூடாது என்று ஆறுதல் தீர்ப்பை எழுதி வாசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்.
பல நூறு ஆண்டுகளாக பல்லாயிரக் கணக்கான வழக்குகள் பதிந்தப் பின்னரே ஆரிய மனு தர்மத்தின் ''சதி '' எனும் உயிருடன் எரிக்கப்படும் உடன் கட்டை படுகொலையை நிருத்தக் கோரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதனால் ஜல்லிக்கட்டு என்றப் பெயரில் நடைபெறும் மிருகவதையும், பகிரங்க சூதாட்டமும் நிருத்தப்பட வேண்டுமெனில் நல்லோர்கள், நடுநிலையாளர்கள் சடைவடையாமல் தொடர்ந்து நீதிமன்றத்தை நோக்கி நடையாய் நடந்தால் இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகாவது ''உடன் கட்டை'' தடை செய்யப்ட்டதைப் போல் ஜல்லிக்கட்டும் தடை செய்யப்படலாம்.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்